பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 11 March 2022 12:08 AM IST (Updated: 11 March 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே கொந்தளம் ஊராட்சி மீனாட்சிபாளையம் அருகே உள்ள பச்சபாளி பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 30). கூலித்தொழிலாளி. இவரும் ராதிகா (27) என்பவரும் கடந்த‌ 3½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் சுகதீபன் என்ற மகன் உள்ளான். 
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5-ம் தேதி அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராதிகா விஷம் குடித்து விட்டார். இதை பார்த்த கணவர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராதிகா இறந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். திருமணமான 3½ ஆண்டுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story