குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம்


குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம்
x
தினத்தந்தி 11 March 2022 12:43 AM IST (Updated: 11 March 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.

நீடாமங்கலம்:
நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில், வியாழக்கிழமையையொட்டி குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவில் திருஞானசம்மந்தரால் தேவாரப்பாடல் பெற்ற சிறப்புடையது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகாரதலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு காலை ஹோமம், மதியம் அபிஷேகம், அதனைத்தொடர்ந்து பூர்ணாகுதி, குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகளை கோவில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஹரிஹரன், கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story