விவசாயத்தில் நஷ்டம்; பூச்சி மருந்து குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
பூச்சி மருந்து குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சி குரும்பப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 56), விவசாயி. இவருக்கு விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பூச்சி மருந்து குடித்தார். இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story