தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குரங்குகள் பிடிக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. சிறுவர் சிறுமிகளைய விரட்டிச்சென்று கடித்து விடுகின்றன. மேலும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எல்லாம் அள்ளிச்சென்று விடுகின்றன. தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்து நாசம் செய்து விடுகின்றன. இதனால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பொதுமக்கள், பிள்ளையார்பட்டி.
மாடுகள் தொல்லை
தஞ்சை மாநகராட்சி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே 20-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுன்றனர். ஒரு சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரும் அவதிப்படுகின்றனர். இரவு, பகல் என்று எந்த நேரத்திலும் ஏராளமான மாடுகள் சாலையை ஆக்கிரமித்து உள்ளன. எனவே சம்பந்த பட்ட அதிகாரிகள் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும். மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நடராஜன், தஞ்சாவூர்.
Related Tags :
Next Story