திறந்தவெளியில் சமையல் செய்யும் அவலம்
ஏனாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திறந்தவெளியில் சமையல் செய்யும் அவலம் உள்ளது. எனவே அங்கன்வாடி, சமையல் கூடம் ஆகியவை கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரம்பயம்:
ஏனாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திறந்தவெளியில் சமையல் செய்யும் அவலம் உள்ளது. எனவே அங்கன்வாடி, சமையல் கூடம் ஆகியவை கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திறந்தவெளியில் சமையல்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி ஊராட்சியில் கீழ தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 131 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பள்ளியின் வளாகத்திலேயே அங்கன்வாடி கட்டிடம் ஒன்று இருந்தது. சேதமடைந்த அந்த அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2018-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தரப்படவில்லை. பள்ளி அருகே சமையல் கூடம் ஒன்று இருந்தது. இந்த கூடமும் இடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கக்கூடிய 131 மாணவ- மாணவிகளுக்கும், அங்கன்வாடியில் உள்ள 25 குழந்தைகளுக்கும் சமையல் செய்ய கூடம் இல்லை. இதனால் திறந்த வெளியில் வைத்து சமையல் செய்யும் அவலம் உள்ளது.
சமையல் கூடம் கட்டித்தர வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி ஏனாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அங்கன்வாடி கட்டிடமும், சமையல் கூடமும் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story