மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு ஆண், பெண் என இரட்டைக்குழந்தைகள் பிறந்தன.
பேரையூர்,
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு ஆண், பெண் என இரட்டைக்குழந்தைகள் பிறந்தன.
சிறுமிக்கு பிரசவம்
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவரிடம், விசாரித்த போது அவருக்கு 17 வயதே ஆகி இருந்தது தெரியவந்தது. பிரவசத்தில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
எனவே இது குறித்து, மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரி சோபனா குமாருக்கு, கிடைத்த தகவலின் பேரில் அவர் விசாரணை செய்தார்.
திருமணம்
அப்போது, அந்த சிறுமிக்கும் அதே ஊரை சேர்ந்த சின்னராஜ் (வயது 22) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.
எனவே இந்த குழந்தை திருமணம் குறித்து சோபனா குமார் சாப்டூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த சிறுமியை திருமணம் செய்த சின்னராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
----------------
Related Tags :
Next Story