கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா


கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா
x
தினத்தந்தி 11 March 2022 1:41 AM IST (Updated: 11 March 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கும்பகோணம்:
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி உத்திர விழா 
பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 திவ்ய சேதங்களில் சிறப்பு பெற்றதாக விளங்குவதும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலாகும்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடி விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் பெருமாளும், தாயாரும் பல்வேறு வாகனங்களில் வீதி  உலா நடைபெற உள்ளது.
தீர்த்தவாரி 
வருகிற 18-ந்தேதி பங்குனி உத்திர நாளன்று காலை 8.30 மணிக்கு சிறிய தேர்  உள்பிரகார புறப்பாடும், பகல் 12 மணிக்கு தீர்த்தவாரியும், 21-ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. 
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் மற்றும்  உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Next Story