அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு


அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 11 March 2022 1:50 AM IST (Updated: 11 March 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் யூனியன் மன்ற அவசர கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் மன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு உறுப்பினர்களின் அவசர சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வேட்டையன் தலைமை தாங்கினார் ஆணையாளர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் திருநகர் 2-வது பஸ் நிறுத்தத்தில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் எதிரே உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வணிக வளாக கடைகள் மூலம் சுமார் ரூ.6 லட்சத்திற்கு மேல் வாடகை வசூல் செய்யப்படாதநிலை குறித்தும் கடந்த 2004-ம் ஆண்டிற்கு பிறகு பொது ஏலம் நடத்தாதது மற்றும் கூடுதல் வாடகை தொகை நிர்ணயம் செய்யப்படாதது குறித்தும் பேசப்பட்டது.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான நிலையூர் முருகன் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டமன்ற அறைக்கு செல்லாமல் ஆணையாளர் அறையில் இருந்தபடி கூட்டத்தை புறக்கணித்தனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story