எலக்ட்ரீசியன் உள்பட 2 பேரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி
சேலத்தில் எலக்ட்ரீசியன் உள்பட 2 பேரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:-
சேலத்தில் எலக்ட்ரீசியன் உள்பட 2 பேரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலக்ட்ரீசியன்
சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 54), எலக்ட்ரீசியன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய முகநூலில் வந்த குறுஞ்செய்தியை எடுத்து பார்த்தார். மேலும் அந்த குறுஞ்செய்திக்கு அவர் பதில் அனுப்பினார். இதையடுத்து சுரேஷ் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் லண்டனில் இருப்பதாகவும், உங்களுடைய பெயரில் இந்தியாவில் பார்மசி தொழில் தொடங்க இருப்பதாகவும் கூறினார். இதற்கு சுரேஷ் சம்மதம் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவருடைய செல்போனில் மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர், நான் டெல்லி விமான நிலையத்தில் இருப்பதாகவும், தன்னிடம் 2 லட்சம் பவுண்டு இருந்ததால் தன்னை சுங்கவரி அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்த 2 லட்சம் பவுண்டை விடுவிக்க ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்தை உடனடியாக வங்கி கணக்குக்கு செலுத்துமாறு கூறி உள்ளார்.
மோசடி
இதை உண்மை என்று நம்பிய சுரேஷ் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் செலுத்தினார். பின்னர் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது. இதையடுத்து இந்த மோசடி குறித்து சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சுரேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ராயல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (41). அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், செல்போன் பேன்சி எண்களையும், அதை பெறுவதற்கு ரூ.59 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றார். இதை நம்பிய கனகராஜ் மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குக்கு ரூ.59 ஆயிரம் செலுத்தினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனகராஜ் இதுகுறித்து சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story