பட்டறையில் 32 கிலோ வெள்ளி திருடிய வாலிபர் கைது


பட்டறையில் 32 கிலோ வெள்ளி திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 March 2022 2:02 AM IST (Updated: 11 March 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பட்டறையில் 32 கிலோ வெள்ளி திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம்:-
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 27). இவர் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் வெள்ளிப்பட்டறை வைத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவரது வெள்ளிப்பட்டறையில் 32 கிலோ வெள்ளி திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிவதாபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (24) என்பவர் 32 கிலோ வெள்ளியை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே அஜித்குமார் வெள்ளிப்பட்டறையில் வேலை பார்த்து வந்ததும், அதன்பிறகு வேலையில் இருந்து நின்றுவிட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்ததுடன், 32 கிலோ வெள்ளியையும் பறிமுதல் செய்தனர்.

Next Story