கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 March 2022 2:07 AM IST (Updated: 11 March 2022 2:07 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டு இருந்த ஜாம்புவானோடை தெற்குக்காட்டை சேர்ந்த வைத்தியநாதன் மகன் பாலமுருகன் (வயது 26), பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் (42) ஆகியோரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமுருகன், முருகானந்தம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story