லாரி டிரைவரிடம் ரூ.34 ஆயிரம் மோசடி
தர்மபுரியில் உடனடியாக கடன் வழங்குவதாக கூறி லாரி டிரைவரிடம் ரூ.34 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தர்மபுரி:-
தர்மபுரி ராமன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 40), லாரி டிரைவர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தனியார் நிதி நிறுவனம் நடத்துவதாகவும், ரூ.1 லட்சம் வரை உடனடி கடன் தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு ஆவண செலவு, காப்பீடு ஆகியவற்றுக்காக ரூ.34 ஆயிரத்து 610 அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பி அந்த நபர் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணுக்கு ரகுநாதன் பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்தும் அவருக்கு ரூ.1 லட்சம் கடன் கொடுப்பது தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை. இதுதொடர்பாக அந்த மர்ம நபரின் செல்போனில் தொடர்புகொண்ட போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரகுநாதன் இது பற்றி தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story