போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் சூர்யா திரைப்படம் வெளியீடு
காரிமங்கலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் சூர்யா திரைப்படம் வெளியிடப்பட்டது.
காரிமங்கலம்:-
நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறி, அந்த திரைப்படத்திற்கு பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் இந்த திரைப்படம் ஓ.டி.டி. மூலம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்து எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் பல இடங்களில் பா.ம.க.வினர் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர். நேற்று இந்த திரைப்படம் வெளியான நிலையில் தர்மபுரியில் காலை காட்சி திரையிடப்படவில்லை. காரிமங்கலத்தில் சினிமா திரையரங்கு ஒன்றில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று காலை திரையிடப்பட்டது. பா.ம.க.வின் எதிர்ப்பு காரணமாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் தியேட்டர் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story