கல்லூரி மாணவர் தற்கொலை


கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 11 March 2022 2:17 AM IST (Updated: 11 March 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

மது அருந்தியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மொரப்பூர்:-
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே இருமத்தூர் காலனியை சேர்ந்தவர் துரை. இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 20). இவர் தர்மபுரியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2-ந் தேதி தனது பெரியப்பா இறந்துவிட்டதால் ஊருக்கு வந்த அவர் மது அருந்தி உள்ளார். அப்போது அவரை அவருடைய தந்தை துரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த வசந்தகுமார் வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனை அறிந்ததும் அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை துரை கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story