திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்கிட கோரி திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் கொள்கை உருவாக்கிட வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்திட வேண்டும். கொரோனா தொற்று தடுப்பு செலவின தொகை வழங்கிட வேண்டும். சென்னை ஐகோர்ட்டு உத்தரவினை மேல் முறையீடு செய்யாமலும், சட்ட திருத்தம் செய்யாமலும் மது கூடங்களை மூடிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவபாலன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைத்தலைவர் வைத்தியநாதன், முறைசார தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமசந்திரன், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சந்திரன், சுமைப்பணி தொழிலளர் சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story