கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா; கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
கடத்தூர்
கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில்
கோபி பச்சைமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பங்குனி உத்திர தேர் திருவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேர் திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கோவிலில் உள்ள கொடி மரத்தில் காலை 10 மணி அளவில் கொடியேற்றப்படுகிறது.
தேர் திருவிழா
வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தே்ா திருவிழா 18-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை சுப்பிரமணிய சாமிக்கு காவடி, பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. 9 மணி அளவில் பச்சை சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சண்முகர் அருள்பாலிக்கிறார். மாலை 4 மணி அளவில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள். பின்னர் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடக்கிறது. விழாவையொட்டி அன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதேபோல் கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
Related Tags :
Next Story