நாங்கள் செய்த தவறால் பஞ்சாப்பில் காங்கிரஸ் தோல்வி-சித்தராமையா


நாங்கள் செய்த தவறால் பஞ்சாப்பில் காங்கிரஸ் தோல்வி-சித்தராமையா
x
தினத்தந்தி 11 March 2022 2:29 AM IST (Updated: 11 March 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

நாங்கள் செய்த தவறால் பஞ்சாப்பில் காங்கிரஸ் தோல்வி தழுவியதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்

பெங்களூரு: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. உத்தரபிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலங்கள் ஏற்கனவே பா.ஜனதா வசம் தான் இருக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. தற்போது அங்கு ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. அதனால் அதை காங்கிரஸ் இழக்கிறது. அங்கு நாங்கள் செய்த தவறால் தோல்வியை தழுவியுள்ளோம். தோல்விக்கான காரணங்களை கட்சி மேலிடம் ஆராயும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.

பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறும்போது, "உத்தரபிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இங்கு இரட்டை என்ஜின் அரசுகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றி எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியின் தாக்கம் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் ஏற்படும். நாங்கள் கட்சியை மேலும் பலப்படுத்துவோம்" என்றார்.

Next Story