பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
சேலம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடந்தது.
சேலம்:-
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை கோவிலில் விக்னேஸ்வரர் பூஜையும், அதைதொடர்ந்து கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மூலவர் காவடி பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜையுடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் அபிஷேகம், அலங்காரமும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
விழா நாளான வருகிற 18-ந் தேதி காலை காவடிகள் புறப்பாடு, சிறப்பு அபிஷேகம், அருள் வாக்கு நிகழ்ச்சியும், அதன்பிறகு மாலை 5 மணிக்கு 1008 பால்குடங்கள் ஊர்வலம், 5.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு மூலவர் காவடி பழனியாண்டவருக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரமத்தின் நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story