தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
மின்கம்பம் மாற்றப்பட்டது
வேர்க்கிளம்பி பஞ்சாயத்துக்குட்பட்ட முதலார் தாழத்துவீடு பகுதியில் அரசு பள்ளி அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் ஒன்றின் அடிப்பகுதி சேதமடைந்து சரிந்து, எப்போது வேண்டுமானாலும் சாலையில் முறிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பத்தை நட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
மருதங்கோட்டில் இருந்து வன்னியூர் செல்லும் சாலையில் எருத்தாவூர் என்ற பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
இப்ப விழுமோ? எப்ப விழுமோ?
அருமனை-களியல் சாலையில் படப்பச்சை பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் பட்டுப்போன பெரிய மரம் ஒன்று உள்ளது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரசாம், குஞ்சாலுவிளை.
சேதமடைந்த தடுப்பு சுவர்
தோவாளை, கமல்நகரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் ஓடை உள்ளது. இந்த ஓடையின் மேல் பகுதியில் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தமிழ்ச்செல்வி, ஆரல்வாய்மொழி.
தெரு விளக்கு எரியவில்லை
புத்தளம் பஞ்சாயத்துக்குட்பட்ட அரியபெருமாள்விளை பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே பழுதடைந்த மின்விளக்கை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அல்மாஸ், புத்தளம்.
குப்பைகளை அகற்ற வேண்டும்
பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மணத்திட்டை பாலமோர் மெயின் ரோட்டில் பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் அருகில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வை.பி.விஜய்மணியன், மணத்திட்டை.
Related Tags :
Next Story