பகவதி அம்மன் கோவிலில் ரூ.18½ லட்சம் உண்டியல் வசூல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.18½ லட்சம் உண்டியல் பணம் வசூலானது.
மணவாளக்குறிச்சி,
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக் கொடை விழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிப்ரவரி மாதம் 3-ந் தேதி முதல் நேற்று வரை வைக்கப்பட்டிருந்த 9 நிரந்தர உண்டியல்கள், 7 குடங்கள் மற்றும் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வைக்கப்பட்டிருந்த திறந்த வார்ப்பு போன்றவை நேற்று எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் அதிகாரிகள் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் ஈடுபட்டனர். இதில் ரூ.18 லட்சத்து 49 ஆயிரத்து 903 ரொக்கம், 22.400 கிராம் தங்கம், 72.400 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் வருமானமாக கிடைத்தன.
Related Tags :
Next Story