பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:
உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர பா.ஜ.க. சார்பில் நிர்வாகிகள் 4 ரோட்டில் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இதேபோல் தா.பழூர் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் தா.பழூர்-சித்தமல்லி பிரிவு சாலையில் பட்டாசு வெடித்து, முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story