ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறிப்பு
மார்த்தாண்டம் அருகே ஆட்ேடா டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே ஆட்ேடா டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பூமாத்திவிளையை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது 48), ஆட்டோ டிரைவர். இவருக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாலையில் அடையாளம் தெரியாத ஒருவர் தனிஸ்லாசை நட்டாலம் 4 வழிச்சாலை பகுதிக்கு சவாரிக்கு அழைத்துள்ளார். அதன்படி தனிஸ்லாஸ் தனது ஆட்டோவில் அந்த நபரை நட்டாலம் 4 வழிச்சாலை பகுதிக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அங்கு ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவருடன் நின்று கொண்டிருந்தார். அவர்கள் தனிஸ்லாசை பார்த்ததும் அவரை வழிமறித்து கம்பால் தாக்கினர். பின்னர், தனிஸ்லாசின் செல்போன் மற்றும் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தனிஸ்லாஸ் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து தனிஸ்லாசை தாக்கிய 2 பேரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story