சக்கர நாற்காலியுடன் சென்றதால் மாற்றுத்திறனாளி பேராசிரியருக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு

சக்கர நாற்காலியுடன் சென்றதால் மாற்றுத்திறனாளி பேராசிரியருக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 11 March 2022 3:54 AM IST (Updated: 11 March 2022 3:54 AM IST)
t-max-icont-min-icon

சக்கர நாற்காலியுடன் சென்றதால் மாற்றுத்திறனாளி பேராசிரியருக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு

பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் கவுசிக் குமார் மஜூம்தார் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மாற்றுதிறனாளியான இவர் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவுக்கு செல்ல பெங்களூருவில் இருந்து விமானத்தில் கவுசிக் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார்.
இந்த நிலையில் பெங்களூரு விமான நிலையம் சென்ற அவர் விமானத்தில் ஏற பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலியில் சென்றார். பின்னர் அவர் விமானத்தில் சக்கர நாற்காலியுடன் ஏற முயன்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய விமான நிறுவன அதிகாரிகள் உங்களது சக்கர நாற்காலி பேட்டரியில் இயங்குகிறது. விமானத்தில் பேட்டரியுடன் இயங்கும் பொருட்களை எடுத்து சென்றால் ஆபத்து என்று கூறி சக்கர நாற்காலியை எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று கூறி கவுசிக்கை இறக்கிவிட்டு சென்று விட்டனர்.

Next Story