பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்-மந்திரி சோமண்ணா தெரிவித்துள்ளார்


பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்-மந்திரி சோமண்ணா தெரிவித்துள்ளார்
x
தினத்தந்தி 11 March 2022 4:11 AM IST (Updated: 11 March 2022 4:11 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல்-சபையில் மந்திரி சோமண்ணா தெரிவித்துள்ளார்

பெங்களூரு:
கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ராத்தோட் கேள்விக்கு வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா பதிலளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 2-வது பாதை பையப்பனஹள்ளி முதல் சிக்கபானவாரா வரை 25 கிலோ மீட்டர் நீளத்திற்குஅமைக்க டெண்டர் அழைக்கப்பட்டது. இந்த டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். டெண்டருக்கு அழைப்பதற்கு முன்பே நிலம் கையகப்படுத்துவது மற்றும் வரை படம் தயாரிப்பது போன்ற பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. 

மேலும் 3 பாதைகளுக்கு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற 2026-ம் ஆண்டுக்குள் இந்த பாதை அமைக்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரத்து 767 கோடிக்கு இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 148 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதை அமைக்கப்படுகிறது.
இவ்வாறு சோமண்ணா கூறினார்.

Next Story