பா.ஜ.க. வெற்றி வடமாநிலங்களில் பலமான கூட்டணி அமையவில்லை கே.பாலகிருஷ்ணன் கருத்து


பா.ஜ.க. வெற்றி வடமாநிலங்களில் பலமான கூட்டணி அமையவில்லை கே.பாலகிருஷ்ணன் கருத்து
x
தினத்தந்தி 11 March 2022 4:34 AM IST (Updated: 11 March 2022 4:34 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. வெற்றி வடமாநிலங்களில் பலமான கூட்டணி அமையவில்லை கே.பாலகிருஷ்ணன் கருத்து.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செங்கல்பட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடமாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஒன்றும் பெரிய வெற்றி பெறவில்லை. பல தொகுதிகளில் பா.ஜ.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளது. வடமாநிலங்களில் எதிர்கட்சியினர் பலமான கூட்டணியை அமைக்கவில்லை. இதனால் பா.ஜ.க.வின் அதிருப்தி ஓட்டுகளை எதிரணியினர் ஒன்று சேர்க்க தவறி விட்டனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. 2-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளதாகவும், 2024-ம் ஆண்டு தமிழகத்திலும் ஆட்சியை பிடிப்போம் என பகல் கனவாக பேசி வருகிறார்.

ஏற்கனவே பல மாநிலங்களில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்ததை நாடு பார்த்து கொண்டுதான் இருந்தது. தோற்ற இடங்களில் எல்லாம் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தான் ஆட்சிக்கு வந்தனர். ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி தோற்பதும், மற்றொரு கட்சி வெற்றி பெறுவதும் சூழ்நிலையை பொறுத்தது. இதனால் பா.ஜ.க.வுக்கு ஏகோபித்த ஆதரவு உள்ளது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story