நெல்லை தாமிரபரணி ஆற்றில் கிடந்த அம்மன் சிலை கோவிலில் வைத்து பக்தர்கள் வழிபாடு


நெல்லை தாமிரபரணி ஆற்றில் கிடந்த அம்மன் சிலை கோவிலில் வைத்து பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 11 March 2022 5:04 AM IST (Updated: 11 March 2022 5:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை தாமிரபரணி ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது

நெல்லை:
நெல்லை தாமிரபரணி ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதை கோவிலில் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
அம்மன் சிலை
நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து குளித்து விட்டு செல்வார்கள். மேலும் திதி கொடுக்க பலரும் வருவார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை சிலர் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது காலில் பெரிய கல் போன்ற உருவம் தட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தண்ணீருக்குள் மூழ்கி பார்த்தபோது ஒரு சிலை கிடந்ததை கண்டனர். இதையடுத்து அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து அந்த சிலையை மீட்டு தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அப்போது அந்த சிலை மாரியம்மன் சிலை போன்று அழகாகவும், புத்தம் புதியதாகவும் இருந்தது.
பக்தர்கள் வழிபாடு
இதையடுத்து அருகில் உள்ள திரிசூலி அம்மன் கோவிலில், மாரியம்மன் சிலையை வைத்து தீபாராதனை காண்பித்து பூஜை நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதுகுறித்து திரிசூலி அம்மன் கோவில் பூசாரி முருகன் கூறுகையில், ‘‘தாமிரபரணி ஆற்று தண்ணீருக்குள் ஏதோ ஒரு காரணத்திற்காக 3 அடி உயரம் உள்ள மாரியம்மன் சிலை வீசப்பட்டுள்ளது. இந்த சிலை இருக்கன்குடி மாரியம்மன் சிலை போன்று உள்ளது. அதனை பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளோம்’’ என்றார்.

Next Story