திசையன்விளை அருகே குமாரபுரத்தில் 60 பேருக்கு முதியோர் உதவித்தொகை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
60 பேருக்கு முதியோர் உதவித்தொகை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள குமாரபுரத்தில் முதியோர் உதவி தொகை மற்றும் ரேஷன்கார்டு வழங்கும் விழா நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ், சமூக நல திட்ட தாசில்தார் பத்மபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திசையன்விளை தாசில்தார் செல்லக்குமார் வரவேற்று பேசினார். விழாவில் 60 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணையும், 20 பேருக்கு ரேஷன் கார்டுகளையும் சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்.
அப்போது, அவர் பேசுகையில் “முதியோர் உதவித்தொகை திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றி சிந்தித்து செயல்பட்டு வருகிறார். இதன் பயனாக தினமும் 47 லட்சம் பெண்கள் இலவசமாக பஸ்சில் பயணம் செய்கிறார்கள். மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் 51 லட்சம் பேர் பயன்பெற்று உள்ளனர்” என்றார்.
விழாவில் திசையன்விளை துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் துரைசாமி, சுகாதார ஆய்வாளர் நவராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், செல்வகுமார், இசக்கியப்பன், அயூப்கான், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர்கள் அலெக்ஸ், கமலா சுயம்புராஜன், நடேஷ் அரவிந்த், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story