பரமத்திவேலூரில் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
பரமத்திவேலூரில் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
பரமத்திவேலூர், மார்ச்.11-
பரமத்திவேலூரில் உள்ள பால அய்யப்ப சாமி கோவில் 3-ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி பால அய்யப்ப சாமி மற்றும் அக்ரஹாரம் ராஜ ராஜேஸ்வரி ஆசிரமத்தில் உள்ள விநாயகர், தர்ம சாஸ்தா மற்றும் கிருஷ்ணன் குருசாமி ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யப்ப சாமி மற்றும் ராஜ ராஜேஸ்வரி ஆசிரம நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story