முத்தாரம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.47 லட்சம்


முத்தாரம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.47 லட்சம்
x

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ 47 லட்சம் கிடைத்துள்ளது

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடப்பு உண்டியல் 13, தற்காலிக உண்டியல் 2, மொத்தம் 15 உண்டியல் திறப்பு தென்காசி இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் கோமதி தலைமையில் நடைபெற்றது. கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் பகவதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.47 லட்சத்து 11 ஆயிரத்து 760 ரொக்கம் இருந்தது. மேலும் தங்கம் 268 கிராம் 200 மில்லி கிராம், வெள்ளி ஒரு கிலோ 68 கிராம் 600 மில்லி கிராம் இருந்தது. நிகழ்ச்சியில் கோவில் கணக்கர் டிமிட்ரோ, கோவில் பணியாளர்கள், குலசேகரன்பட்டினம் திருஅருள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிறைகுடியிருப்பு சிவந்தி கல்லூரி மாணவிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story