பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெரியகுளத்தில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 March 2022 4:46 PM IST (Updated: 11 March 2022 4:46 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பெரியகுளம்:
பெரியகுளம் நகரசபை தலைவர் பதவி தி.மு.க.வுக்கும், துணைத் தலைவர் பதவி கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் ஒதுக்கீடு செய்து தி.மு.க. தலைமை அறிவித்தது. 

இந்நிலையில் துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் ராஜாமுகமது வேட்புமனு தாக்கல் செய்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். 

இதைத்தொடர்ந்து ராஜாமுகமது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த பதவிக்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பிரேம்குமாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைமைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதை வலியுறுத்தி பெரியகுளம் வடகரை பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 இதற்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் நகரசபை கவுன்சிலர்கள் பிரேம்குமார், பவானி உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் கட்சியின் தலைமை அறிவித்ததை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Next Story