ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய சங்க செயலாளர் தற்கொலை


ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய சங்க செயலாளர் தற்கொலை
x
தினத்தந்தி 11 March 2022 5:02 PM IST (Updated: 11 March 2022 5:02 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய சங்க செயலாளர் தற்கொலை

வந்தவாசி

வந்தவாசி கேசவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 59).

 இவருக்கு பிரியாகாருண்யா என்ற மனைவியும், பத்மபிரபன் என்ற மகனும் உள்ளனர். 

மனோகரன் வந்தவாசி வீட்டுவசதி வாரியத்தில் சங்க செயலாளராக பணியாற்றி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். 

அவருக்கு பி.எப். பணம் ரூ.30 லட்சம் கிடைக்கவில்லை, எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும், மனமுடைந்த மனோகரன் இன்று வீட்டில் சேலையால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மனைவி மற்றும் மகன் தூக்கில் இருந்து மனோகரனை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மனோகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்கு அவரின் உடலை அனுப்பி வைத்தனர். 

மகன் பத்மபிரபன் கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்குப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story