வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 11 March 2022 5:40 PM IST (Updated: 11 March 2022 5:40 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கூடலூர்:
கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அமராவதி வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனக்காப்பாளர் குருமூர்த்தி, வனக்காவலர் ஜோர்ஜ்குட்டி ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மரத்தில் முதியவர் ஒருவர் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிகொண்டிருந்தார். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் மேலக்கூடலூர் கருமேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த மாயாண்டி (வயது 65) என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதுபோல ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (56). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு இதய நோய் இருந்தாக தெரிகிறது. இதனால் அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கொப்பையம்பட்டிக்கு வந்து தங்கி இருந்தார். இந்நிலையில் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story