5 சிசுக்கள், மனித உடல் பாகங்கள் மீட்பு -நாக்பூரில் பரபரப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 11 March 2022 5:47 PM IST (Updated: 11 March 2022 5:47 PM IST)
t-max-icont-min-icon

நாக்பூரில் 5 சிசுக்கள் மற்றும் மனித உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாக்பூர்,
நாக்பூரில் 5 சிசுக்கள் மற்றும் மனித உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனித உடல் பாகங்கள் 
நாக்பூர் குவாட்டா காலனி காம்பவுண்ட் சுவர் ஓரமாக மனித உடல்  பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மனித உடல் பாகங்களான ஒரு சிறுநீரகம், சதை கட்டி, எலும்புகள் கிடந்தன. மேலும் 5 சிசுக்களும் கிடந்தன. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து இவை வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். 
சிசுக்கள் கிடந்த நிலையில், மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த உடல் பாகங்களை மீட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.  
தீவிர விசாரணை
இது பற்றி போலீஸ் துணை கமிஷனர் கஜானன், “கருக்கலைப்பு சட்டபூர்வமாக அல்லது சட்டவிரோதமாக நடத்தப்பட்டதா என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருவதாகவும், இதைத்தவிர கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மனித உடல் பாகங்களை வீசி சென்ற ஆசாமியை அடையாளம் காண விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். 
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளின் பட்டியலை தயாரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story