விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
கொரடாச்சேரி;
கொரடாச்சேரி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட முகந்தனூரை சேர்ந்தவர் வெங்கடாசலம்(வயது67). இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த வெங்கடாசலம், வீட்டில் யாரும் இல்லாத போது வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) எடுத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story