அரியவகை பறவைகளை வேட்டையாடிய நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


அரியவகை பறவைகளை வேட்டையாடிய நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 March 2022 6:18 PM IST (Updated: 11 March 2022 6:18 PM IST)
t-max-icont-min-icon

அரியவகை பறவைகளை வேட்டையாடிய நபர்களை வனசரக காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் பகுதியில் அரிய வகை பறவைகளை சிலர் வேட்டையாடி விற்பனை செய்வதாக தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் திருவள்ளூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நேற்று திருவள்ளூர் போலீஸ் நிலைய வனச்சரக அலுவலர் கிருஷ்ணகுமார், வனவர்கள் உமாசங்கர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சட்டத்துக்கு புறம்பாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காமன் கூட், இந்தியன் மார்கன், நார்தன் பின்டேல், காட்டன் பிக்மி கூஸ் ஆகிய பறவை இனத்தைச் சேர்ந்த 28 பறவைகள் உயிரிழந்த நிலையில் கைப்பற்றப்பட்டது, இது தொடர்பாக வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் கைப்பற்றப்பட்ட பறவையின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்து கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வனசரக காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story