5 ஆட்டோக்கள் பறிமுதல்


5 ஆட்டோக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 March 2022 6:55 PM IST (Updated: 11 March 2022 6:55 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி பகுதியில் 5 ஆட்டோக்கள் பறிமுதல்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி பகுதியில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், தகுதி சான்று புதுப்பிக்கப்படாமலும், அனுமதி சான்று இல்லாமல் ஆட்டோக்கள் அதிகளவில் ஓடிக் கொண்டு இருப்பதாக வேலூர் துணை போக்குவரத்து கமிஷனர் இளங்கோவுக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் வேலூர் துணை போக்குவரத்து கமிஷனர் இளங்கோவன் மேற்பார்வையில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தலைமையில் இன்று நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படமாலும் அனுமதி சான்று இல்லாமல் 5 ஆட்டோக்கள் இயக்கப்பட்டது தெரியவந்தது.

 இதையடுத்து 5 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Next Story