விவசாயி கொலை வழக்கில் தந்தை மகன் கைது
ஆற்காடு அருகே நடந்த விவசாயி கொலை வழக்கில் தந்தை மகன் கைது செய்யப்பட்டனர்
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதரன் (வயது 45). விவசாயி.
இவரது மகள் சினேகாவுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சினேகா பக்கத்து ஊரான கீராம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு காதலனுடன் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டார்.
இதனால் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி காலை சசிதரன் தனது நிலத்திற்கு சென்றபோது, விக்னேஸ்வரன், அவரது அண்ணன் பசுபதி மற்றும் பெரியப்பா சவுந்தராஜன் உள்ளிட்ட சிலர் சசிதரனை கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி (45), இவரது மகன்கள் விக்னேஸ்வரன், பசுபதி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று சவுந்தர்ராஜன், அவரது மகன் லோகேஷ் ஆகிய 2 பேரை ஆற்காடு தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story