திருத்தணி அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
திருத்தணி அருகே கரும்பு கழிவுகளை தீயிட்டு கொளுத்தும்போது கரும்பு தோட்டம் தீயில் கருகியது.
திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 50). இவர் தனக்கு சொந்தமான இஸ்லாம் நகர் ரோடு பகுதியில் உள்ள 4 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். தற்போது கரும்பு அறுவடைக்கு தயாராக இருந்தது. மேலும், இந்த கரும்புகளை வெட்டி திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வதற்கும் விவசாயி ராமமூர்த்தி அனுமதி பெற்றிருந்தார். கூலியாட்கள் ஒரிரு நாளில் கரும்பு வெட்டுவதற்கு தயாரக இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ராமமூர்த்தி கரும்பு தோட்டத்தின் அருகே, அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கரும்பு வெட்டிய தோட்டத்தில் கரும்பு கழிவுகளை தீயிட்டு கொளுத்தினார். அப்போது தீ மளமளவென பரவி ராமமூர்த்தியின் கரும்பு தோட்டமும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து ராமமூர்த்தி திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போரடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் 2 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் கருகியது. இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story