வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு


வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 11 March 2022 7:27 PM IST (Updated: 11 March 2022 7:27 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகங்களை சுற்றிப்பார்த்தார். பிரசவ மற்றும் குழந்தைகள் பிரிவு, உள் நோயாளிகள் வார்டு ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து டாக்டர்கள் மற்றும் நர்சுகள் ஆகியோர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின் போது மருத்துவ அலுவலர் அம்பிகா, உதவி மருத்துவ அலுவலர் சிவசுப்பிரமணியம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story