கதிர்மலை கந்தசாமி கோவில் பிரம்மோற்சவம்-நாளை மறுநாள் தொடங்குகிறது
பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில் பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் தொடங்குகிறது.
மோகனூர்:
பிரம்மோற்சவம்
மோகனூர் அருகில் உள்ள பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா 5 நாட்கள் நடக்கிறது. அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விழா தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், 8 மணிக்கு கொடிமரத்துக்கு அபிஷேகம் மற்றும் பிரதிஷ்டையும் நடக்கிறது. தொடர்ந்து கொடிமரத்துக்கு செம்பு கவசம் சாத்தப்பட்டு, கொடியேற்றப்படுகிறது.
மாலை வள்ளி, தேவசேனா திருக்கல்யாண உற்சவமும், சாமி உள்புறப்பாடும் நடைபெற உள்ளது. 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கோ பூஜை, யாகசாலை, வேதபாராயணம் மற்றும் மண்டகப்படி மகா அபிஷேகம் நடக்கிறது. தொடந்து ஊஞ்சல் உற்சவமும், சாமி உள்புறப்பாடும், இரவு ஒயிலாட்டம் மற்றும் கும்மியாட்டம் நடக்கிறது.
பால்குட ஊர்வலம்
16-ந் தேதி (புதன்கிழமை) ஊஞ்சல் உற்சவம், மகா அபிஷேகம் நடைபெறும். 17-ந் தேதி (வியாழக்கிழமை) சிறப்பு அபிஷேகமும், 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், 8 மணிக்கு யாகசாலை, வேதபாராயணம், மகா பூர்ணாகுதி நடக்கிறது.
இதையடுத்து 9 மணிக்கு கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட உள்ளது. மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், ஒய்யாரநடை, 6 மணிக்கு கொடி இறக்குதல், 7 மணிக்கு மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story