பரமத்திவேலூர் அருகே வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
பரமத்திவேலூர் அருகே வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு பரமத்திவேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜா, துரை செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமத்தி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் மேகலா பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், பரிசோதனைகள், தடுப்பூசிகள், சித்த மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் கண் மருத்துவம் ஆகியவை குறித்து விளக்கமாக கூறினார். முகாமில் டாக்டர்கள் லிபியா, மோகன்ராஜ், பிரியங்கா, சிவகாமி, சமுதாய சுகாதார செவிலியர் ஜெயலட்சுமி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்பட்டன. முடிவில் சுகாதார ஆய்வாளர் குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story