விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை


விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 11 March 2022 8:09 PM IST (Updated: 11 March 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது58). விவசாயி. இவர் கடந்த கடந்த 2019-ம் ஆண்டு குடும்ப தகராறில் மகன் லோகேசை, கொடுவாளால் வெட்டி கொலை செய்தார். இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ஜாமீனில் வெளியே வந்த கிருஷ்ணப்பா அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் (42). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவரது மனைவி இவரை பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இதனால் விரக்தி அடைந்த பிரான்சிஸ் சேவியர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story