கிருஷ்ணகிரியில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மனித நேய மக்கள் கட்சி நகர்மன்ற உறுப்பினர் ஆயிஷா முகமத்ஜான் தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் சல்மான் வரவேற்றார். த.மு.மு.க. மகளிர் பேரவை பொருளாளர் சல்மா கண்டன உரையாற்றினார். பர்கூர் ஒன்றிய பொருளாளர் ஷாஹின், நகர அனைத்து ஜமாத்கள் கூட்டமைப்பு தலைவர் சையத் இர்பானுல்லா உசைனீ, மாவட்ட துணை செயலாளர் தாஜூத்தீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தலைமை கழக பேச்சாளர் நவுஷாத், மாவட்ட தலைவர் நூர் முஹம்மத் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். நகர பொறுப்புக்குழு தலைவர் பாபு நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்க நினைக்கும் பா.ஜனதா அரசையும், கர்நாடக மாநில அரசையும் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story