தேன்கனிக்கோட்டை அருகே இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தேன்கனிக்கோட்டை அருகே இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 March 2022 8:09 PM IST (Updated: 11 March 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளியில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க கிளை செயலாளர் நாகரத்னா தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க வட்ட தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாதர் சங்க மாநில துணைத்தலைவர் சங்கரி, மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலாமேரி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது சுய உதவிக்குழு வங்கி கடனுக்கு வங்கி புத்தகம் வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வங்கியில் தாட்கோ மூலம் கடன் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடனை கொரோனா காலத்தில் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாய சங்க வட்ட செயலாளர் அனுமப்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story