உக்ரைனில் சிக்கி தவிக்கும் ஓசூர் மாணவரை உடனடியாக மீட்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க குடும்பத்தினர் மனு கொடுத்தனர்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் ஓசூர் மாணவரை உடனடியாக மீட்க வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஓசூர்:
உக்ரைனில் தவிக்கும் மாணவர்
ஓசூர் மத்திகிரி அருகே டைட்டான் டவுன்சிப் பகுதியில் வசித்து வருபவர் செபஸ்டியன் ராஜ். வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான இவர், ஓசூரில் உள்ள பிரபல கைக்ெகடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஆரோக்கிய செபஸ்டியன் ராஜ் (வயது 21). இவர் உக்ரைனில் உள்ள கெர்சன் நகரில், 3-வது ஆண்டு மரைன் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது உக்ரைன் மீது ரஷ்யா ஆக்ரோஷமாக போர் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் முக்கிய நகரங்கள் தாக்குதல்களுக்கு ஆளாகி, பல மாடி கட்டிடங்கள், மருத்துவமனைகள் தரைமட்டமாகி உள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்தும், உணவு தேடி அலையும் நிலையும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் போர் நடைபெறும் இடத்தில் சிக்கியுள்ள மாணவர் ஆரோக்கிய செபஸ்டியன்ராஜ், கண்ணீர் மல்க உருக்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-
கெர்சன் நகரில் 3 மாணவர்கள் உள்பட 5 பேர் சிக்கியுள்ளோம். எங்கு பார்த்தாலும் குண்டுமழை பொழிந்து, எங்கள் கண்முன்னே கட்டிடங்கள் இடிந்து விழுந்து தீப்பிடித்து எரிகின்றன. உயிரை காப்பாற்றி கொள்ள, மக்கள் நாலாபுறமும் ஓடி ஒளிகிறார்கள். நாங்கள் உதவிகள் கேட்டும் யாரும் உதவவில்லை. கெர்சன் நகர் தற்போது ரஷ்யாவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால், இங்கிருந்து யாரும் எல்லையை தாண்டி செல்லமுடியவில்லை.
உயிருடன் திரும்ப முடியும்
இது குறித்து மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்தோம். மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களை மீட்க வேண்டும். இந்த பகுதியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் எல்லையான, ஒடேசா நகருக்கு அனுப்பிவைத்தால்கூட, நாங்கள் பத்திரமாக, உயிருடன் திரும்ப முடியும். இவ்வாறு அந்த மாணவர் வீடியோவில் உருக்கமாக கதறியுள்ளார்.
Related Tags :
Next Story