கிருஷ்ணகிரி, ஓசூரில் 2 பெண்கள் தற்கொலை


கிருஷ்ணகிரி, ஓசூரில் 2 பெண்கள் தற்கொலை
x
தினத்தந்தி 11 March 2022 8:10 PM IST (Updated: 11 March 2022 8:10 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி, ஓசூரில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி பவித்ரா (வயது 25). விக்னேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் மன வேதனையில் இருந்த பவித்ரா, கடந்த 9-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் தின்னூரை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மனைவி நதியா (32). 2 மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு திடீரென கருச்சிதைவு ஏற்பட்டது. இதனால் மன வேதனையில் இருந்த நதியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story