கஞ்சா, லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது


கஞ்சா, லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 March 2022 8:10 PM IST (Updated: 11 March 2022 8:10 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா, லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீசார் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலை ஐகுந்தம் கூட்டு ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை  நடத்தினர். அப்போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் சத்ரபதி (வயது36) என்பதும், கையில் 150 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும், பர்கூர் அருகே கீழ்சீனிவாசபுரம் பகுதியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் மற்றும் போலீசார் சென்னை சாலையில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற சின்ன மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (47), அவதானப்பட்டி சின்னப்பன் (43) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு அட்டைகள், ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story