கொப்பல் அருகே டிராக்டர் கவிழ்ந்து 4 பேர் பலி; 18 பேர் படுகாயம்


கொப்பல் அருகே டிராக்டர் கவிழ்ந்து 4 பேர் பலி; 18 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 March 2022 9:22 PM IST (Updated: 11 March 2022 9:22 PM IST)
t-max-icont-min-icon

கொப்பல் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொப்பல்:

திருமண நிச்சயதார்த்தம்

  கொப்பல் மாவட்டம் காரடகி டவுன் 18-வது வார்டு இந்திராநகரில் வசித்து வதவர் யமனூரப்பா சிந்தனூர்(வயது 55), இவரது குடும்பத்தினர் அஞ்சம்மா(45), தியாவம்மா(60), சேஷப்பா பந்தி(40) ஆகியோர் ஆவர். இவர்கள் உள்பட இவர்களுடைய குடும்பத்தினர் 25 பேர் நேற்று ஒரு டிராக்டரில் கொப்பல் மாவட்டம் கனககிரி அருகே நடந்த உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் டிராக்டரில் வீட்டுக்கு புறப்பட்டனர். அவர்கள் கனககிரி தாலுகா நவலியா பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

  அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடிசாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

4 பேர் பலி

  இந்த விபத்தில் யமனூரப்பா சிந்தனூர்(வயது 55), அஞ்சம்மா(45), தியாவம்மா(60), சேஷப்பா பந்தி(40) ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். 18 பேர் காயம் அடைந்து கொப்பல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இச்சம்பவம் குறித்து கனககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story