குன்னூரில் டேன் டீ உதவி கணக்கு அதிகாரி தற்கொலை


குன்னூரில் டேன் டீ உதவி கணக்கு அதிகாரி தற்கொலை
x
தினத்தந்தி 11 March 2022 9:33 PM IST (Updated: 11 March 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் டேன் டீ உதவி கணக்கு அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக தூக்கில் தொங்கினாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குன்னூர்

குன்னூரில் டேன் டீ உதவி கணக்கு அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக தூக்கில் தொங்கினாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

டேன் டீ அதிகாரி

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் மீனாட்சி சரவணன் (வயது 40). இவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள டேன் டீ தலைமை அலுவலகத்தில் உதவி கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் தனித்தனியாக வசித்து வந்தனர். மீனாட்சி சரவணன் குன்னூரில் உள்ள டேன் டீ குடியிருப்பில் வசித்து வந்தார். 

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் பிற்பகல் 3 மணியாகியும் மீனாட்சி சரவணன் பணிக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அவருடைய வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. 

உடனே அவர்கள் கதவை பலமுறை தட்டினார்கள். ஆனாலும் திறக்க வில்லை. இதனால் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு மீனாட்சி சரவணன் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். 

போலீசார் விசாரணை

இது குறித்து குன்னூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story