அன்னை தெரசாவின் ஓவியத்தை வரைந்து அசத்திய மாணவர்கள்


அன்னை தெரசாவின் ஓவியத்தை வரைந்து அசத்திய மாணவர்கள்
x
தினத்தந்தி 11 March 2022 9:34 PM IST (Updated: 11 March 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே மகளிர் தினத்தையொட்டி அன்னை தெரசாவின் ஓவியத்தை வரைந்து மாணவர்கள் அசத்தினர்.

நெய்க்காரப்பட்டி:
பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 192 மாணவர்கள் இணைந்து 18 அடி உயரம், 12 அடி அகலத்தில் வண்ண பொடிகளால் அன்னை தெரசாவின் உருவத்ைத கோலமாக வரைந்து அசத்தினர்.
இந்த ஓவியத்தை பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பார்த்து ரசித்தனர். பழனி புறநகர் வட்டார கல்வி அலுவலர் ரமேஷ் குமார் பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி ஓவிய ஆசிரியர் சின்னப்பா மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.

Next Story